இலத்திரனியல் ஜாம்பவான் சொனி நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் அதன் பிளே ஸ்டேஷன் வலையமைப்பு மற்றும் கிரியோ சிடி இசை வலையமைப்பு ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் சுமார் 77 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் தரவுகளும் திருடப்பட்டன.
இதில் அவர்களின் பெயர், விபரங்கள் மற்றும் கடனட்டை விபரங்களும் களவாடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சொனி குறித்த இணைய வலையமைப்புகளை இடை நிறுத்தியிருந்ததுடன் அண்மையில் அதனை மீண்டும் வழமையான செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவந்தது.
இந்நிலையில் சொனியின் 'சொனி பிக்ஸர்ஸிடன்' இணைந்த பல இணையத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இம்முறை சுமார் 1 மில்லியன் பாவனையாளர்களின் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் உட்பட பல தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலுக்கும் லல்செக் (Lulzec) என்ற குழு உரிமை கோரியுள்ளது.
இக்குழுவே ஆரம்பத்தில் அமெரிக்க செய்தி சேவைகளான பி.பி.எஸ் மற்றும் பொக்ஸ் ஆகியவற்றின் இணையங்களையும் தாக்கியதாக உரிமைகோரியிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லல்செக் (Lulzec) மிகவும் இலகுவான எஸ்கியூஎல் (SQL injection vulnerability) குறைப்பாட்டின் ஊடாகவே தரவுகளை திருடியதாக தெரிவித்துள்ளது. மேலும் சொனியானது பாவனையாளர்களின் தகவல்களை மிகவும் இலகுவாக திருடக்கூடிய வகையில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென சொனி தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment