தொழிநுட்ப உலகில் கணனி விளையாட்டுகளுக்கென தனி இடம் உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமை.
கணனிகளில் விளையாடுவதற்கு மேலதிகமாக இதற்கென தனியாக எக்ஸ்பொக்ஸ் 360, பிளே ஸ்டேசன் என பல உபகரணங்கள் உள்ளன.
இத்தகைய விளையாட்டுக்கள் டிவிடிகள், திரைப்படங்கள் மற்றும் அல்பங்களின் விற்பனையை முந்திவிட்டதாக வெளிநாட்டு இணையத்தளங்கள் தங்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளன.
இந்தளவிற்கு பார்வையாளர்களை அடிமையாக்கியுள்ள கணனி விளையாட்டுக்களில் குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் வெளிவருவதற்கு முன்னரே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவன.
அத்தகைய ஓர் விளையாட்டாக 'மொடர்ன் வோர்பெயார்' ( Modern Warfare) ஐக் குறிப்பிடமுடியும்.
போர் மற்றும் இராணுவ படையெடுப்புக்கள் சம்பந்தமானதே இவ்விளையாட்டாகும்
தற்போது இதன் மூன்றாம் மொடர்ன் வோர்பெயார் 3' பகுதி வெளியாகவுள்ளது
இது மிகப் பிரபல்யமான கணனி விளையாட்டான ' கோல் ஒப் டியுடி ' (Call of Duty) வரிசையில் வெளியாகிய 'மொடர்ன் வோர்பெயார்' இன் 3 ஆவது பகுதியாகும்.
இதுவரை வெளியாகியுள்ள இதன் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதிகள் கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
இந்நிலையில் அதன் மூன்றாம் பகுதிக்கான டிரையலர் (Trailer) தற்போது வெளியாகியுள்ளது.
வெளியாகி சில நாட்களிலேயே இதற்கான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
எனினும் இது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விற்பனைக்கான முற்பதிவும் தற்போது தொடங்கியுள்ளது. amazon
இதுவும் அதன் முன்னைய விளையாட்டுக்களை போல விற்பனையில் சாதனை படைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment