பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

15 April 2011

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளினின் 122 ஆவது பிறந்த நாளை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி கொண்டு இருக்கும் போது அவரை பற்றி சிறுது அறிவோமா? 




சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin )(ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.

அவரது இளம் பருவத்தை பற்றி ஆராய்ந்தோம் ஆனால் 

சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் "மியூசிக் ஹால்" கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்தே இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் அவர் அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.1896-இல் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில்,சார்லியும் அவரது சகோதரர்சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.பின்னர் இருவரும்அநாதைகளுக்கான பள்ளி(Hanwell School for Orphans and Destitute Children) ஒன்றில்வளர்ந்தனர். இதற்கிடையில் இவர் தந்தை குடிப் பழக்கத்தினால் உடல் நலம் குன்றி சாப்ளினின் 12-ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த "கேன் ஹில் அசைலம்"(Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப் பட்டார்.பின்பு இவரும் 1928 இறந்தார்.

சாப்ளின் 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-இல் மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்த பொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயது இருந்த பொழுது,சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் "சின்ட்ரெல்லா " பாண்டோமைமில் ஒரு பூனையாக(நகைச்சுவைக் கதாப்பாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903-இல் "ஜிம்,அ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்"(Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித் தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம்.இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ்(Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும் , Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.அமெரிக்காவின் குடிபெயர்ப்புப் பதிவுகளின் படி கார்னோ குழுவுடன் October 2, 1912 -இல் அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார்-இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.


அவரது திரை உலக வாழ்க்கை பற்றி ஆராய்ந்தோம் ஆனால் 
சாப்ளினின் திறமையை தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னை பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.இவரது அசாதாரன வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப் பட்ட உரிமையுமாகும்.இவரது வளர்ச்சியையும், இவரது நிர்வாகியாக பணி புரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பள பட்டியல் எடுத்துக்காட்டியது.


இவர் 1919 -இல் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் கிரிபித்துடன் இணைந்து யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோ (United Artists studio)-வை துவங்கினார்.
1927-இல் டாக்கீஸ்(ஓசையுடன் கூடிய திரைப்படங்கள்) வெளிவரத் துவங்கி மிகவும் பிரபலம் அடைந்தாலும் 1930 வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கைத்தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-இல் வெளிவந்த "லைம்லைட்"(Limelight) திரைப்படத்தில் நடன அமைப்பும், 1928 திரைப்படம் "தி சர்க்கஸ்" (The Circus) -இன் தலையங்க இசை அமைப்பும் இவரே செய்தார்.இவர் இசையமைத்த பாடல்களில் அதிக புகழ் பெற்றது ஸ்மைல்(Smile).

தி கிரேட் டிக்டேடர்


இவரது முதல் டாக்கீஸ் 1940-இல் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையையும்அவரது ஃபாசிஸ்ட் கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம்.இப்படம் அமெரிக்கா 
இரண்டாம் உலகப் போரில்புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப் பட்டது.இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்

இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957) , "தி சாப்லின் ரெவ்வூ" (1959) மற்றும் சோ·பியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ·ப்ரம் ஹாங்காங்".


அவரது திருமண வாழ்கை பற்றி ஆராய்ந்தோம் ஆனால் 
இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பல முறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப் பட்டது. அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். 

நவம்பர் 26,1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது. மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால், இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடை பெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை; 
குழந்தை 21 வயது வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப் பட்டார். சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.

சாப்ளினின் இறப்பு 

சாப்ளின், 1977 ஆம் ஆண்டு, கிருஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது. மார்ச் 1,1977 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று,திருடர்கள் பிடி பட்டனர்.சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் கைப்பற்றப் பட்டது.இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப்பட்டது

சாப்ளின் பற்றிய சுவையான செய்திகள்(Trivia)

  • சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
  • சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக் காரர் சாமி ரிஷவெஸ்கி (Sammy Reshevsky.)-யிடம் பயின்றார்.
  • சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!



திரைப்படங்கள்

  • Tillie's Punctured Romance (1914) (நடிகராக மட்டும்)
  • Shoulder Arms (1918)
  • The Kid (1921 movie)|The Kid (1921)
  • The Nut (1921) (கௌரவ வேடம்)
  • Souls For Sale (1923) (கௌரவ வேடம்)
  • A Woman of Paris (1923) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)
  • The Gold Rush (1925)
  • A Woman of the Sea (1926) (தயாரிப்பாளர்)
  • The Circus (1928)
  • Show People (1928) (கௌரவ வேடம்)
  • City Lights (1931)
  • Modern Times (1936)
  • The Great Dictator (1940)
  • Monsieur Verdoux (1947)
  • Limelight (1952)
  • A King in New York (1957)
  • A Countess From Hong Kong (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)





2 comments:

Speed Master said...

நான்ம் இவரைப்பற்றி பதிவிட்டுள்ளேன்

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_16.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம் அசத்தல்
அறிய விஷஙக்ள்...

வாழ்த்துக்கள்...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails