Mr.திருடன் ஜோக்
நீதிபதி : ஏம்பா.. திருடிட்டு இல்லவே இல்லேங்குறியே.. அப்ப உன்னைப் புடிச்ச போலீஸ் சொல்றதெல்லாம் தப்பா..?
"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...
வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!
வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!
நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
பீரோ சாவி என்ன????!!!!..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!
பீரோ சாவி என்ன????!!!!..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!
என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..?
அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..!
அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..!
டிபார்ட்மெண்டுக்கே தண்ணி காட்டிட்டு இருந்த mr.திருடனை எப்படி சார் வழிக்கு கொண்டு வந்தீங்க..?
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
அதிகாரி : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..
ஏம்பா Mr.திருடன்.. ரெண்டு காலும் முடியாம இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேலை பண்ணிருக்கியே..? நல்லா இருந்தீன்னா என்னென்ன செய்வே..?
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!
ஏம்பா Mr.திருடன்.. இப்பிடி சைக்கிள் திருடியே மாட்டிக்கிறியே.. வெட்கமா இல்லே..?
ஆமாங்க எஜமான்.. அதுக்குதான் ட்ரைவிங் கத்துக்கறேன்.. கூடிய சீக்கிரம் தொழில்ல முன்னேறிடுவேன் அய்யா..!
ஆமாங்க எஜமான்.. அதுக்குதான் ட்ரைவிங் கத்துக்கறேன்.. கூடிய சீக்கிரம் தொழில்ல முன்னேறிடுவேன் அய்யா..!
பேசாம வேறே ஏரியாவிலே போய் திருடலாமான்னு நெனைக்கிறேன் ஏட்டையா..
அப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே Mr.திருடன்.. நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் சொல்லு.. மாமூல் ஒரே தடவையா கொடுக்க முடியலேன்னா சொல்லு.. ரெண்டு தடவையா வாங்கிக்கறோம்..!
அப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே Mr.திருடன்.. நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் சொல்லு.. மாமூல் ஒரே தடவையா கொடுக்க முடியலேன்னா சொல்லு.. ரெண்டு தடவையா வாங்கிக்கறோம்..!
கடி ஜோக் 3
சில ஜோக்ஸ் வாசிக்க கிடைத்தது அவை உங்களுக்காக
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....
நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......
ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....
ஒருவர்: கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....
ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!
நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!
நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....
ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

6 comments:
ஜோக்கெல்லாம் சூப்பர்...
எனக்கு பிடித்த ஜோக்(ஸ்)...
//"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...
வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!//
மற்றும்
//நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....//
இவைகளை மிகவும் ரசித்தேன்.
-
DREAMER
நன்றி DREAMER வருகைக்கும் கருத்துக்கும்
எல்லாமே நல்லாயிருக்கு இது மட்டும் இரண்டு தடவை வந்திருக்கு ஏதோ தவறு என நினைக்கிறேன்
"ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!
ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!"
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
திருத்தி விட்டேன்
நன்றி ஞானசேகர் வருகைக்கும் கருத்துக்கும்
:))
நைஸ் ஜோக்ஸ்!
கீப் இட் அப்!
நன்றி சிபி வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment