பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

30 December 2009

உலகை பயமுறுத்தி வரும் ஊடகக் கொலைகள்

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கு நல்லதொரு சான்றாகும். வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி அதன் வருடாந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.

உலக நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 33 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573 பேர் கைது செய்யப்பட்டதுடன் 1456 பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டில் 60 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 26 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை சர்வதேச ஊடக அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளின் தேவையை உணர்த்தியுள்ளது.

யுத்தம் மற்றும் தேர்தல்கள் விடயம் தொடர்பில் 2009 ஆண்டில் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான செய்திகளை வெளிக்கொணர்வதில் உலக அளவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணியுள்ளன.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.




ஆப்கான் நாட்டிலும் மெக்சிகோ, சோமாலியா ஆகிய பகுதிகளிலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 929 ஆக இருந்தது. எனினும் இவ்வாண்டு 1456 ஆக அது உயர்வடைந்துள்ளது. இதில் 364 முறைப்பாடுகள் ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

தேர்தல் வன்முறை காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 ஊடகவியலார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமே இவ்வாண்டில் அநேகரது விமர்சனத்துக்கு உள்ளானது. ஒரே நேரத்தில் மிக அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தை உலக நாடுகள் பல கண்டித்திருந்தன.

அதேவேளை, தமது சுயகருத்துக்களை இணையத்தில் வெளியிட்ட நூற்றுக்கும் அதிகமான வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எகிப்து நாட்டின் வலைப்பதிவர் கரீம் அமீர் தனது சொந்த கருத்தினை வெளியிட்டமைக்காக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அத்துடன் வலைத்தளத்தினூடாக பிரசித்தி பெற்ற சர்கனர் என்ற நகைச்சுவை நடிகர் இன்னும் 34 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 167 ஊடகவியலாளர்கள் இதுவரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சராசரியாக ஊடகவியலாளர் ஒருவரேனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் மாத்திரம் 60 ஊடகவியலாளர்கள் உடலளவில் தாக்கப்பட்டுள்ளார்கள்.

29 December 2009

அனைத்து வீடியோ வகைகளையும் விண்டோஸ் மீடியா பிளேயர்யில் பிளே செய்ய

ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம். ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும். அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும் .


Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும் மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.

பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம்


நாமே நமக்கு எதிரியாகும் சந்தர்ப்பங்கள் நிகழ்வதுண்டு. முன்கோபம் அதற்கு நல்லதொரு உதாரணம். முன்கோபத்தின் பின்விளைவுகள் நாம் எதிர்பார்க்காதளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்போம்.

இதுவும் அவ்வாறாதொரு சம்பவம் தான். தாயின் மீது பழிவாங்க நினைத்து முடியாமல் போக, பிஞ்சுக் குழந்தையின் மீது தனது வெறித்தனத்தை காட்டியுள்ள சம்பவம் இது.

மதுவெறியில் இரண்டு வயது குழந்தையின் உடலுக்குள் சுமார் 36 ஊசிகளை குத்திப் பழிவாங்கியுள்ளார் பிரேசில் நாட்டவர் ஒருவர். இவற்றில் இறுதியாக இருந்த நான்கு ஊசிகளை நேற்றுப் பிற்பகல் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.

குழந்தையின் தாயாருடன் சித்தப்பா உறவு முறையிலான ஒருவர் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிக கோபம் கொண்ட அவர் ஊசிகளை எடுத்து குழந்தை மீது குத்தியுள்ளார்.

குழந்தையின் மார்பு, கழுத்து, வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாக ஊசி குத்தப்பட்டதால் அக்குழந்தை துடிதுடித்துப் போயுள்ளது.

கிட்டத்தட்ட 14 ஊசிகளை இதுவரை மருத்துவர்கள் குழந்தையின் உடம்பிலிருந்து எடுத்துள்ளனர். குழந்தையின் கழுத்தும் முதுகெலும்பும் சேர்ந்த பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த ஊசியையும் வைத்தியர்கள் மீட்டுள்ளனர்.

பிரேசிலின் வடகிழக்கிலுள்ள செல்வடோர் நகரில் நடைபெற்ற இச்சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அந்நகரின் பிரசித்தி பெற்ற வைத்தியசாலையான அனா நெரியில் சுமார் 3 மணிநேர சத்திர சிகிச்சை நடைபெற்றது.

தாயின் இரண்டாவது கணவராகக் கருதப்படும் 30 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவி மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த நபர் குழந்தை மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊசிகளால் குத்துவதற்கு முன்னர் குழந்தை மீது மதுபானத்தை கொட்டியதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மனைவி மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்கு இந்தக் (இரண்டாவது) கணவருக்குப் பிஞ்சுக் குழந்தைதான் கிடைத்ததா?

அமெரிக்காவை நேக்கித் தீவிரவாதத் தற்கொலைப்படை


"என்னைப் போன்று மேலும் பலர் தீவிரவாதத் திட்டத்துடன் அமெரிக்காவை நோக்கி பல முனைகளிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர்" என்று அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்று பிடிபட்ட நைஜீரிய இளைஞர் உமர் பாருக் அப்துல்முத்தல்லாப் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. உளவு அமைப்புக்கள் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அப்துல்முத்தல்லாப் கூறுகையில்,

"என்னைப் போன்று பலர் அமெரிக்காவை நோக்கி வருகின்றனர். குறிப்பாக ஏமனிலிருந்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அமெரிக்காவைத் தாக்கலாம்" என்று தெரிவித்தார்.

முத்தல்லாப் பிடிபடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா தலைவர்கள் ஓடியோ டேப் ஒன்றைவெளியிட்டனர். அதில்,

"கடவுளின் எதிரிகளைத் தாக்க வெடிகுண்டுகள் போய்க் கொண்டிருக்கின்றன" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

23 வயதான முத்தல்லாப் தற்போது கூறுவதைப் பார்க்கும்போது, அல் கொய்தாவின் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் அமெரிக்காவைக் குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது.

உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக phone களுக்கு call செய்யலாம்...


இப்பொழுது முற்றிலும் இலவசமாக உங்கள் மொபைலில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்,

இதற்கு உங்களிடம் 3G வசதி(வீடியோ கால் வசதி) கொண்ட நோக்கியா or iphone மொபைல் இருக்கவேண்டும் (3G நெட்வேர்க் இருக்கவேண்டிய அவசியம் இல்லை),

உங்கள் மொபைலில் GPRS வசதியை activate செய்து அதன் பின்பு உங்கள் மொபைலில் இருந்து http://www.fring.com/ என்ற இணையத்தளத்துக்கு சென்று fring என்ற mobile application ஐ டவுன்லோட் செய்க.பின்பு ஏதாவது voip account ஒன்றை registrar செய்ய வேண்டும். (உதாரணமாக voipcheap , voipwise , smartvoip , jumblo). பின்பு உங்கள் மொபைல் இல் நீங்கள் டவுன்லோட் செய்த fring ஐ open செய்து உங்களுக்கென்று ஒரு account ஐ registrar செய்க. பின்பு முறையே


option-> setting -> configure service -> SIP -> other -> user ID and Password ஐ type செய்து proxy address என்ற இடத்தில் proxy address ஐ type செய்ய வேண்டும் (உதாரணமாக sip.voipcheap.com , sip.voipwise.com , sip.smartvoip.com , sip.jumblo.com ).

பின்பு ok கொடுத்து main மெனுவிற்கு சென்று option -> setting -> show phone contact ஐ select செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் save செய்துள்ள contact number களின் list உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் யாருக்கு call செய்ய வேண்டுமோ அந்த number ஐ select செய்து option -> call -> SIP call ஐ select செய்யுங்கள். உங்களின் மொபைல் இல் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்படுவதை மொபைல் இன் screen இல் காணலாம்.....

NOTE: voip account களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.....
voip account பற்றிய மேலதிக விபரங்களுக்கு
click hear--> voipcheap , voipwise , smartvoip , சும்ப்லோ

பயனுள்ளதாக இருந்தால் ஓட்டு போடுங்க

28 December 2009

மச்சான் வாடா கடை தெருவில் நின்று கடலை போடலாம்


மச்சான் வாடா , கடை தெருவில் நின்று கடலை போடலாம் , டி கடை மறைவில் நின்று தம் போடலாம் , அப்பாவின் சட்டை 

27 December 2009

என்னா copy சிங்களவங்க

நான் புதிதாக ஒரு சிங்கள பாட்டுக்கு ஹிந்தி வீடியோ போட்டு செய்ய சொல்லி நண்பர் ஒருவர் சொன்னார் அவரது கணணி கல்விக்காக 
அப்ப நான் செய்த ரீமிக்ஸ் எப்படி செட் ஆகி இருக்கு பாருங்க

orginala முதலில் பாருங்கள்


அடுத்தது ரீமிக்ஸ் வீடியோ பார்த்த பின் rating பண்ண மறக்காதிங்க

13 December 2009

கை தொலைபேசி இடுப்பு எலும்பை பாதிக்கிறது


மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது.இடுப்பு பெல்டில் செல்போன்களை பொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளை பலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150 ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணி நேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனை வைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

9 December 2009

தொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை குறைக்க

எத்தனையோ முறை விண்டோஸ் இயங்குதளம் முரண்டு பிடித்திருக்கிறது.
எதாவது ஒரு தளத்தைப் பார்வையிடும்போதோ, குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தும்போதோ இயங்குதளம் கேட்பாரின்றி அப்படியே கிடக்கும்.

இதை ஹேங்கிங் [ HANGING] என்பார்கள். என்ன செய்தாலும் நமது கட்டுக்குள் வந்து தீராது.

உலாவி கூடப் பல நேரங்களில் அப்படியே நின்று நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும்.
அப்போது அந்த அப்ளிகேசனை அப்படியே நிறுத்திவிட முயற்சி செய்வோம். எதுவும் நடக்காது.

இந்த மாதிரியான சமயத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இணையத்தில் உள்ளது.





http://www.stylet-software.com/click-gone-setup.exe


http://www.stylet-software.com

நம்ம PC ல virus இருக்கா இல்லையா ?

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.

உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.

முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.



கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)
Aladdin (eSafe)
ALWIL (Avast! Antivirus)
Authentium (Command Antivirus)
Avira (AntiVir)
Bit9 (FileAdvisor)
Cat Computer Services (Quick Heal)
ClamAV (ClamAV)
CA Inc. (Vet)
Doctor Web, Ltd. (DrWeb)
Eset Software (ESET NOD32)
ewido networks (ewido anti-malware)
Fortinet (Fortinet)
FRISK Software (F-Prot)
F-Secure (F-Secure)
AVG Technologies (AVG)
Hacksoft (The Hacker)
Ikarus Software (Ikarus)
Kaspersky Lab (AVP)
McAfee (VirusScan)
Microsoft (Malware Protection)
Norman (Norman Antivirus)
Panda Security (Panda Platinum)
Prevx (Prevx1)
Rising Antivirus (Rising)
Secure Computing (Webwasher)
Softwin (BitDefender)
Sophos (SAV)
Sunbelt Software (Antivirus)
Symantec (Norton Antivirus)
VirusBlokAda (VBA32)
VirusBuster (VirusBuster)

முகவரி: http://www.virustotal.com/

நீங்கள் மற்றவருடைய கணணியை இயக்கலாம்




வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn. உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn. இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது. Firewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும்.

உங்கள் நண்பரின் இன் கை தொலைபேசியை SMS மூலம் Restart செய்யலாம்.


79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து (அதாவது ''''' என்று 79 தடவை ) உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும்.

இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும்.
NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.

பயனுள்ளதா இருந்த மறக்காம ஓட்டு போடுங்க
Related Posts with Thumbnails