skip to main |
skip to sidebar

- home ல work எதுவும் இல்லாததால என்னுடிய பழைய நண்பர் கூறிய பரோட்டா செய்வது எப்படி என்ற டிப்ஸ் ஐ வழங்கலாம் என்று
- இருக்கிறேன்
- முன்குறிப்பு: இந்த செய்முறை மணமான ஆண்களுக்கு மட்டுமே. மணம் ஆன பெண்களோ, ஆகாத ஆண்களோ செய்ய முயற்சித்து அதற்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நான் பொறுப்பு அல்ல ;) ஆனால் எனக்கு இன்னும் மணம்
- ஆகவில்லை
- தேவையானபொருட்கள்:
- மாவு ( கோதுமையாஇருக்கனும்)
- உப்பு
- தண்ணீர்
- எண்ணெய்
- அப்புறம்ஒருமுள்கரன்டி.
- செய்முறை:முதல்ல ஒரு பெரிய சட்டியில 2 அல்லது 3 கப் மாவை எடுத்து கொள்ளவும்.
- (வீட்டிலஆள்எண்ணிக்கை அதிகம் என்றாலோ அல்லது விருந்தினரை என்றாலோ அதற்கு தக்கவாறு மாவு அதிகம் எடுத்துக்கொள்ளவும். அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்)
- அதனுடன் சிறிது சிறிதாக நீரை கலந்து பிசையவும். மிகவும் கடினமாகவும் இருக்ககூடாது. மிகவும் லூஸ் அகவும் இருக்ககூடாது. நீர் சேர்த்து பிசைந்து எடுத்துகொள்ளவும்.இப்பொழுது அந்த மாவு உருண்டையின் சுற்றுப்புறத்தில் எண்ணெய் தடவிதலைக்கு மேலே தூக்கிசுத்தம் செய்யப்பட்ட மேசையின் மீதோ, அல்லது ஒரு சமதளபாத்திரத்திலோ நன்றாக "சொத்" "சொத்" என்றுபத்து முறைஅடியுங்கள்.(யார் மேல் ரொம்ப நாளா கோவம் இருக்குன்னா அத இங்ககாட்டுங்க!) மீண்டும் உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவி ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். குறைந்தது 3 மணிநேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பிறகு இந்த பெரியமாவு உருண்டையிலிருந்து கோல்ப்பந்தில் இரண்டுபந்து செய்யும் அளவிற்கு தேவையான அளவு சிறிய உருண்டையாக உருண்டை பிடித்து சுற்றிலும் எண்ணெய் தடவி ஒரு ஓரமாக வைத்து விடவும். எல்லா உருண்டயும் உருட்டினதும் முதலில் உருட்டிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டை கொண்டு தேய்க்கவும். வட்டமாக தேய்க்ககூடாது. ஒரே திசையிலிருந்து தேய்க்க வேண்டும். ஒட்டிக்கொள்ளும் போன்று தோன்றினால் திருப்பி போட்டு தேய்க்கலாம். நீள்வட்ட அல்லது சற்றேரக்குறைய செவ்வகவடிவத்தில் வருமாறு தேய்க்க வேண்டும். சப்பாத்தியின் தடிமன் அளவிற்கு தேய்த்தபின்னர் அதனை நீளவாக்கில் வைத்துக்கொண்டு ஒரு இன்ச்சிற்கும் சற்றுகுறைவான அகலத்தில் ஒரு சின்னபட்டை உள்நோக்கி மடிக்கவும். இப்பொழுது அதே அளவுபட்டையினை வெளிநோக்கி மடிக்கவும். இப்படியாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் மடித்து முடித்து பார்த்தால் அது மடிப்புடன் கூடிய நீளபட்டையாக இருக்கும். இப்பொழுது ஒரு முனையை பிடித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை திருகவும். இபொழுது இது ஒரு முறுக்கியகயிரை போன்று தோற்றமளிக்கும். இப்பொழுது ஒரு முனையைமையமாக வைத்துக்கொண்டு கொசுவர்த்தி சுருள் போன்று, இடைவெளி விடாமல் நெருக்கமாக சுற்றி அடுத்த முனையை கடைசி சுற்றுடன் அழுத்தி இணைத்து விடவும். எப்பொழுதெல்லாம் ரொம்பவும் ஒட்டிகொள்ளும் போன்று தோன்றுகிறதொ, அப்பொ எல்லாம் எண்ணெய் தடவி கொள்ளவும்
அப்பாடா.. இன்னும் கொஞ்சம்தான்.. மனசுதளராதீங்க... பின்னே பரோட்டான்னா சும்மாவா?
- எல்லா சிறிய உருண்டைகளையும் வரிசையாக மேலே சொன்ன மாதிரி தேய்த்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் தேய்த்த உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பதுபோல் வட்டமாக தேய்க்கவும். ஆனால் சப்பாத்தியைவிட கொஞ்சம் தடிமனாகவே இருக்கட்டும். ரொம்பவும் மெல்லிசாக தெய்த்துவிட வேண்டாம். 3 அல்லது 4 சப்பாத்தி ஒன்றாக இருந்தால் எவ்வளவு தடிமனாக இருக்குமோ அவ்வளவு தடிமனாக இருக்கட்டும். இப்பொழுது தோசைக்கல்லை எடுத்து அடுப்பில்வைத்து சப்பாத்தி சுடுவது போன்று மாற்றி மாற்றி திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இப்பொழுது பரோட்டா தயார்.... உடன் தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா நல்லதேர்வு.
- அசைவப்பிரியர்களுக்கு, காரமான கோழிக்கறி கொழம்பு.. ம்ம்ம் ரொம்பவே நல்லா இருக்கும்.அட.. தேவையான பொருட்கள்ல எடுத்துவச்ச முள்கரண்டிய என்ன பண்ணுறதுன்னு கேக்கறீங்களா? அதுவந்து ... அதுவந்து... சரி வேணாம் கழுவி உள்ளேயே வச்சிருங்க ;)
- முன்குறிப்புல சொன்னது என்னாத்துக்கு.. சும்மாபில்டப்பா? ம்ம் அதுவா... அடுத்த எபிசோடுல நாளிக்கு சொல்றனே :P இல்ல உங்களுக்குயார்க்குனா தெரிஞ்சா சொல்லுங்க
- பி. கு. - இந்தமாதிரி நான் பிளான் பண்ணி படிதது கூட இல்லை
9 comments:
ஆகா என்ன விளக்கம், என்ன விளக்கம், பரோட்டாவை பற்றி சொல்லி பின்னிட்டீங்க போங்க...
போட்டு தாக்குறிங்க போங்க!
நல்ல விளக்கம்!!
Parotta instructions ellam nalla irukku, aana tamil'a kolai seyratha konjam niruthuina tamil koorum nal ulagam ungalukku nandri patirukkum.
Nandri
Tamilan
//Blogger Jaleela said...
ஆகா என்ன விளக்கம், என்ன விளக்கம், பரோட்டாவை பற்றி சொல்லி பின்னிட்டீங்க போங்க...//
நன்றிங்கோ
//Blogger நாளும் நலமே விளையட்டும் said...
போட்டு தாக்குறிங்க போங்க!//
நன்றிங்கோ
//Blogger Mrs.Menagasathia said...
நல்ல விளக்கம்!!//
நன்றிங்கோ
//Anonymous said...
Parotta instructions ellam nalla irukku, aana tamil'a kolai seyratha konjam niruthuina tamil koorum nal ulagam ungalukku nandri patirukkum.
Nandri
Tamilan//
திருத்தி கொள்ள முயல்கிறேன் அணினியே
இவ்வளவு எண்ணையா??
Post a Comment