பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

28 October 2011

கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை

இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 


ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3

புது வசதிகள் பலவற்றுடன் அண்ட்ரோய்ட் 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்

இம்மாதம் 19 ஆம் திகதி ஹொங்கொங்கில் வைத்து அண்ட்ரோய்டின் இயங்குதள வரிசையின் புதிய தொகுப்பான 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' இனை கூகுள் அறிமுகப்படுத்தியது.

இதன் முந்தைய தொகுப்பான ' ஹணி கொம்' இவ்வருட ஆரம்பத்தில் வெளியானது.



பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுப்பு பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும், வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட்கள் ஆகியவற்றுக்கென உருவாக்கப்பட்டுள்ளன.

தனது முந்தைய தொகுப்புகளான ஜிஞ்ஞர்பிரட் மற்றும் ஹணிகொம் ஆகியவற்றின் கலவையென கூகுள் தெரிவிக்கின்றனது.



இதன் குறிப்பிடத்தக்க வசதிகள்

வொய்ஸ் டைபிங், குரலை இனங்கண்டு அதனை எழுத்துக்களாக மாற்றுதல்.

இலகுவாக கோப்புகளை உருவாக்குதல்

பில்ட் இன் போட்டோ எடிடர்

மேம்படுத்தப்பட்ட கொப்பி என்ட் பேஸ்ட் வசதி

முகத்தினை அடையாளங் கண்டு கொள்ளும் வசதி

மேம்படுத்தப்பட்ட உலாவி

என்.எப்.சி அண்ட்ரோயிட் பீம் பரிமாற்ற வசதி

ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் தற்போது கெலக்ஸி நெக்ஸஸ் கையடக்கத் தொலைபேசி மட்டுமே இதன் மூலம் இயங்குகின்றது.



அடுத்தவருட ஆரம்பம் முதல் மற்றைய கையடக்கத்தொலைபேசிகளும் இதனைக் கொண்டியங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நொக்கியா விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகள் அறிமுகம்: மாற்றம் கைகொடுக்குமா?

கையடக்கத்தொலைபேசிகளின் ஜாம்பவானாக வர்ணிக்கப்பட்ட நிறுவனம் நொக்கியா.

எனினும் அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோயிட் கையடக்கத்தொலைபேசிகளின் வருகைக்கு பின்னர் இது வீழ்ச்சியடைந்தது.

தன்னை சந்தையில் நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை இது மேற்கொண்ட போதும் பயனளிக்கவில்லை.

'சிம்பியன்' இயங்குதளத்தினை பெரும்பாலும் சார்ந்திருந்தமையும்,பாவனையாளர்கள் அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோயிட் கையடக்கத்தொலைபேசிகளை நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டமையும் நொக்கியாவின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாகக் கருதப்பட்டன.

தனது மொபைல் விண்டோஸ் இயங்குதளத்திற்கு சரியான ஒரு ஜோடியைத் தேடிக் கொண்டிருந்தது மைக்ரோசொப்ட். இந்நிலையில் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக மைக்ரோசொப்டுடன் கைகோர்த்தது நொக்கியா.மைக்ரோசொப்டும் இதற்கு உடன்பட்டது.

மிக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இவ் ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக நொக்கியா விண்டோஸ் கையடக்கத்தொலைபேசியானது நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் போது 2 நொக்கியா விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதில் ஒன்று நொக்கியா 'லுமியா 800'



இது தொடர்பான சில விபரங்கள்

Microsoft Windows Phone 7.5 Mango

AMOLED capacitive touchscreen

8 MP, 3264x2448 pixels, Carl Zeiss optics, autofocus, dual-LED flash

1.4 GHz processor, Qualcomm MSM8255 chipset, 3D Graphics HW Accelerator

MicroSIM card support only

Nokia ClearBlack display

மற்றையது நொக்கியா 'லுமியா 710'



இது தொடர்பான சில விபரங்கள்

Microsoft Windows Phone 7.5 Mango

1.4 GHz processor, Qualcomm MSM8255 chipset, 3D Graphics HW Accelerator

8 GB storage, 512 MB RAM

5 MP, 2592х1944 pixels, autofocus, LED flash

MicroSIM card support only

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவை இரண்டும் டிசம்பர் மாதமளவில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை விட மேம்பட்ட நொக்கியா விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகள் அடுத்த வருடமளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இழந்த இடத்தைப் பிடிப்பதற்குத் துடிக்கும் நொக்கியாவிற்கும், சந்தையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும் மைக்ரோசொப்டிற்கும் இக்கையடக்கத்தொலைபேசிகள் கைகொடுக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




பேஸ்புக்கின் பிரமாண்ட 'சேர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது.

பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செய்யும் சேர்வர்களை ஒரே இடத்தில் பாரியளவில் நிறுவி செயற்படுத்தும் இடம் என இலகுவாக விளக்கமுடியும்.



ஆர்டிக் வட்டப் பகுதியில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள இவ்விடத்தினை பேஸ்புக் தேர்ந்தெடுக்கப் பிரதான காரணம் குளிர் ஆகும்.

பொதுவாக சேர்வர்களை இலகுவாக வெளிப்பிரதேச வளியைக் கொண்டு குளிர்விக்க முடியுமென்ற காரணத்தினாலேயே குளிர்ப்பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே கூகுளும் பின்லாந்தில் தனது சேர்வர் பார்ம் ஒன்றினை அமைத்தது, மேலும் மைரோசொப்ட்டும் சைபீரியாவில் சேர்வர் பார்ம் ஒன்றினை ஆரம்பிக்கும் திட்டத்தினைக் கொண்டிருந்த போதிலும் அதனைப் பின்னர் கைவிட்டது.

கூகுள் முதல் பேஸ்புக் வரையான மிகப்பெரிய இணைய நிறுவனங்களின் முதுகெலும்பு இத்தகைய 'சேர்வர் பார்ம்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts with Thumbnails